நாகையில் தனித் திறமையில் சாதனை புரிந்த அரசுப் பள்ளி மாணவர்கள் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில்யில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பாடத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சாதனையாளர்களாக 10 மாணவர்கள் தற்போது உருவாகி உள்ளனர்.
இந்நிலையில் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இப்பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதீபா 2.20 நிமிடங்களில் இந்தியாவில் உள்ள 360 மாவட்டங்களை சரளமாக கூறி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
அதேபோல ஆங்கிலத்தில் வாய்ப்பாடுகளை சொல்லுதல், 1330 பொட்டுகளில் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை வரைதல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மிகக் குறுகிய நேரத்தில் நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.
ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள 10 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆக்கமும் மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாகி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் : பால முத்துமணி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.