’கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்வுக்காக படித்தேன்’ - மருத்துவபடிப்பில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவி

’கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்வுக்காக படித்தேன்’ - மருத்துவபடிப்பில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவி

  • Share this:
நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்ததால்தான் என்னால் மருத்துவ இடம் பெற முடிந்தது என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானம் நிறைவேற்றி, அவசரச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் 620 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி.இதுகுறித்து மாணவி திவ்யதர்ஷினி கூறியபொழுது, மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அரசுப் பள்ளியில் பயின்றபோது சிறப்பான முறையில் ஆசிரியர்கள் வழிநடத்தி ஊக்கமளித்ததாகவும் கூறினார். தன் தந்தை கேட்டரிங் சர்வீஸ் செய்து வருவதாகவும் தாய் ஆசிரியராக இருப்பதாகவும் கூறும் திவ்யதர்ஷினி, கொரோனா காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்த சூழலிலும், அவர்கள் தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளித்தனர் என்றார். மேலும், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்வுக்காக படித்ததாக தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: