மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவருடைய பெற்றோரின் தவிப்பு.. கலந்தாய்வில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவருடைய பெற்றோரின் தவிப்பு.. கலந்தாய்வில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

மாணவர் அன்பரசனின் பெற்றோர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அரசுப்பள்ளியில் படித்து மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்பும் வெள்ளை கோட்டும் வழங்கப்பட்டது. அங்கு நடந்த ஒரு நிகழ்வு காண்போரை நெகிழச் செய்ததுள்ளது.

  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரைச் சேர்ந்தவர் அன்பரசன். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த அவருக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தமிழக முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்பும் வெள்ளை கோட்டும் வழங்கினார்கள். வரிசையில் நின்ற ஒரு மாணவருக்கு மேடையில் வழங்க ஸ்டெதெஸ்கோப் இல்லாததால் அன்பரசனுக்கு வழங்கப்பட்ட ஸ்டெதஸ்கோப்பை திரும்பப் பெற்று, இன்னொரு மாணவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தன் மகனுக்கு ஸ்டெதஸ்கோப் இல்லையா என்று கலங்கிப்போனார்.

தன் மகனை ஸ்டெதஸ்கோப்புடன் ஊருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். அதுதான் மருத்துவருக்கான அடையாளம் என்று தவிப்புடன் இருந்தார். அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மற்றொரு இடத்திலிருந்து ஸ்டெதெஸ்கோப் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். ஸ்டெதெஸ்கோப் கையில் கிடைக்கும் வரை வேறு எங்கும் செல்லாமல் உணவுகூட உண்ணாமல் அங்கேயே காத்திருந்தார் அன்பரசனின் தாயார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு உணவு வழங்கி, புதிய ஸ்டெதெஸ்கோப்பும் கொடுத்த பின், மகிச்சியுடன் அங்கிருந்து தன் மகனுடன் கிளம்பினார்.அரசுப்பள்ளியில் படித்து, மருத்துவக் கனவோடு மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதி மருத்துவ இடம் பெற்றிருக்கிறார் அன்பரசன். தமிழ் வழியில் பயின்றதால் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க முடியாமல் இயற்பியல் ஆசிரியர் கலாபன் உதவி, ஊக்கத்துடன் இரண்டு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்த தான் கண்டிப்பாக அரசு மருத்துவராகத்தான் பணியாற்றுவேன் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: