• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்கிறீர்களா? அரசுப் பள்ளி விண்ணப்பத்திலுள்ள கேள்வியால் சர்ச்சை - கல்வி அலுவலர் விளக்கம்

மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்கிறீர்களா? அரசுப் பள்ளி விண்ணப்பத்திலுள்ள கேள்வியால் சர்ச்சை - கல்வி அலுவலர் விளக்கம்

இந்தி மொழி குறித்து கேட்கப்பட்ட விண்ணப்பம்

இந்தி மொழி குறித்து கேட்கப்பட்ட விண்ணப்பம்

கோயம்புத்தூர் அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்வு செய்துகொள்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்அளித்துள்ளார்.

  • Share this:
    கோயம்புத்தூரில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேருவதற்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்வு செய்கிறீர்களா? என்று கேள்வி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களில் 18 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    அதில் 14-வது கேள்வியாக, இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பம்


    தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருக்கின்ற நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே ஹிந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஹிந்தியை திணிக்க தொடங்கி விட்டதா? கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி மத்திய அரசு புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா என்ற ஐயம் எழுகிறது.

    தேசியக் கல்விக் கொள்கை மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கிறது - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


    புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கக்கூடிய நிலையில் அந்த குழு எந்த பரிந்துரையும் செய்யாத நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி விட்டதா?

    உடனடியாக கோவை மாநகராட்சி ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் 20.8.20 காலை 11 மணி அளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலகர் உமா, ‘பழைய விண்ணப்பங்களில் ஹிந்தி மொழி குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், அந்த விவகாரம் தற்போது தன் கவனத்திற்கு வந்ததாகவும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் விளக்கமளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: