Home /News /tamil-nadu /

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, உலர் பொருட்களுடன், மாதத்துக்கு 10 முட்டைகளும் வழங்குமாறு அரசாணை வெளியீடு..

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, உலர் பொருட்களுடன், மாதத்துக்கு 10 முட்டைகளும் வழங்குமாறு அரசாணை வெளியீடு..

முட்டைகளும் வழங்க அரசாணை வெளியீடு

முட்டைகளும் வழங்க அரசாணை வெளியீடு

சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உலர் பொருட்களோடு சேர்த்து மாதம் ஒன்றுக்கு 10 முட்டைகளையும் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலர் பொருட்களோடு சேர்த்து முட்டைகளையும் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் எனவும் கூறியுள்ளது.

அதே நேரத்தில் முட்டைகளைத் தினந்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு உலர் பொருட்களோடு சேர்த்து மாதம் ஒன்றுக்கு 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.



மேலும் படிக்க...சேலம்: நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.. மின் கசிவு காரணமா என விசாரணை..

அதில், பள்ளிகளுக்கு மாணவர்கள் அடிக்கடி வருவதை தவிர்க்கும் வகையில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் போதே முட்டைகளையும் சேர்த்து வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் உலர் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி முட்டைகளை வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற சமூக நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Egg, Government, Government school, Mid Day Meal, Mid Day Meal Workers, Midmeal cook, School students, Welfare scheme

அடுத்த செய்தி