Home /News /tamil-nadu /

CRRI : வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி பெற அரசு அனுமதி

CRRI : வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி பெற அரசு அனுமதி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதி வழங்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த 80 மாணவர்கள், சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் மாநிலத்தில் ஓராண்டு கட்டாய பயிற்சியில் ஈடுபட்டால் தான், மருத்துவராக பணியாற்ற முடியும்.

    அதன்படி, தங்களை பயிற்சி மருத்துவராக சேர்க்கக்கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் 80 பேருக்கு மட்டும் பயிற்சி மருத்துவராக பணியாற்ற அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    Must Read : தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

     

    80 பேரும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையில்லா சான்று பெற்ற பின், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சியில் சேரலாம் என அரசு அறிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Doctor, MBBS

    அடுத்த செய்தி