மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

ராஜேந்திர பாலாஜி

தொழிற்சாலை நடத்துபவர்களும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்புடன் சமூக விலகலைக் கடைபிடித்து தொழிற்சாலை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    மக்களின் நலனை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்கள் என ஆயிரம் நபர்களுக்கு நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    மேலும் விருதுநகர் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் இந்த மாவட்டத்தில் நூற்பாலைகள் கைத்தறி, விசைத்தறி பட்டாசு போன்ற தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக விலகலை கடைபிடித்து தொழில் செய்ய அனுமதிக்கப்படும்.

    தொழிற்சாலை நடத்துபவர்களும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்புடன் சமூக விலகலைக் கடைபிடித்து தொழிற்சாலை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ன செய்தாலும் அதில் ஆதரவும் இருக்கும். எதிர்ப்பும் இருக்கும். ஆகையால் அண்டை மாநிலம் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறந்தவுடன் தமிழக அரசு உடனே திறக்கவில்லை. மக்களின் நலனை காத்து மக்களுக்காகத்தான் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சென்று இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று மதுவை வாங்கி வருவதால் சில போலியான மதுபானங்கள் உள்ளே வர வாய்ப்புள்ளதால் அதை தடுப்பதற்காக தான் முதல்வர் டாஸ்மாக் கடையை திறக்க முன்வந்துள்ளார். மக்களின் நலன் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Karthick S
    First published: