பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி கண்டுபிடிப்பு - திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • Last Updated: September 4, 2020, 12:27 PM IST
  • Share this:
திருவன்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தில் 30,000 பேர் அதிகாரிகளால் முறைகேடாக சேர்க்கப்பட்டு 18 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறையான விவசாயிகளை பயனாளிகள் பட்டியலில் சேர்க்காமல் முறைகேடுகள் நடைபெற்று தற்போது அவைகள் அம்பலமாகி வருகிறது. அதன்படி உரிய வருமானமில்லாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி ஊக்க நிதி (பி.எம் கிசான்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளை கூடுதலாக சேர்க்கும் வகையில் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கிய நிலையில் இதற்கான வலைதளத்தில் சில எளிய மாற்றங்களையும் செய்தது. இதனைத் தவறாக பயன்படுத்தி ஒரு சில கணினி மையங்களில் முறைகேடும் நடந்தது தெரியவந்தது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இது வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவேற்றம் செய்துள்ளனர் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை திருவண்ணாமலை ஒன்றியத்தில் 7024 பேரும், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 4151 பேரும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 1658 பேரும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 1400 பேரும், கலசபாக்கம் ஒன்றியத்தில் 1549 பேரும், சேத்பட் ஒன்றியத்தில் 1096 பேரும், அனக்காவூர் ஒன்றியத்தில் 402 பேரும், ஆரணி ஒன்றியத்தில் 390 பேரும், செங்கம் ஒன்றியத்தில் 1227 பேரும், செய்யாறு ஒன்றியத்தில் 424 பேரும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 951 பேரும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் 796 பேரும், போளுர் ஒன்றியத்தில் 851 பேரும், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 900 பேரும், தௌ;ளார் ஒன்றியத்தில் 739 பேரும், வந்தவாசி ஒன்றியத்தில் 565 பேரும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 198 பேரும், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 572 பேரும் என 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களின் உண்மைத்தன்மை அறிய நேரடி களஆய்வுக்கு வட்டாட்சியர்கள் தலைமையில் கடந்த 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களின் முதற்கட்ட விசாரணையில் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து சுமாராக 32 ஆயிரம் பேர் பதிவேற்றம் செய்ததில் தகுதியில்லா விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பணம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.இக்குழுவினர் நடத்திய ஆய்வில் ரூ.1 கோடியே 10 லட்சம் போலியான பயனாளிகள் கணக்கிலிருந்து பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்த ஆட்சியர், பணம் அனைத்தும் பெறப்பட்டவுடன் போலியாக விவசாயிகளை பதிவேற்றம் செய்த கணினி மையங்கள் மற்றும் அதற்கு உதவியாக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, கணக்கிலிருந்து பணத்தை எடுத்தவர்களிடம் அப்பணத்தை திரும்பப் பெறுவதற்காக வருவாய்த்துறை, காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருவரது வங்கிக் கணக்கில் இத்திட்டத்திலிருந்து பணம் செலுத்தப்பட்டு அவர் அதனை எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும், அல்லது அந்த நபரிடமிருந்து பணத்தை பெற்று பிரதமர் கிசான் திட்ட வங்கி கணக்கில் செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.. ஹேக்கர்கள் ட்வீட்டால் பரபரப்பு..

இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பலராமன், விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக விவசாயிகளை பொறுத்தவரையில் வருவாய்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய 3 துறைகளும் கொள்ளை துறைகளாக உள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை கிசான் சம்மான் வங்கி கணக்கிற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading