27 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கையெழுத்தாகிறது

Youtube Video

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். மேலும் 28000 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

  • Share this:
    தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக 'புதிய தொழில் கொள்கை' மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்த இரண்டு தொழில் கொள்கையும் இன்று காலை சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார். மேலும், தமிழகத்தில் 28 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் தொடங்க 27 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.

    இவைத்தவிர ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டையும் முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார். இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் படிக்க... திருமண அழைப்பிதழ் கொடுக்கும் நாடகம்.. மோசடி கும்பல் கைது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: