Home /News /tamil-nadu /

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைததிகளை விடுதலை செய்ய அரசாணை

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைததிகளை விடுதலை செய்ய அரசாணை

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக, முன் விடுதலை செய்ய ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல் ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தக்காளியை வட மாநிலங்களில் இருந்து கொண்டுவர தமிழக அரசு முடிவு

    அதன்படி முறையாக ஆய்வு செய்து, வழிக்காட்டுதல்களுக்கு உட்பட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவினர், தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Anna birthday, Prisoners

    அடுத்த செய்தி