பள்ளி திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்க - முன்னாள் அமைச்சர்

மாதிரி படம்

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரச மறுபரீசலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரச மறுபரீசலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டுமென தெரிவித்தனர்.

  கொரோனா தொற்றும் தமிழகத்தில் குறைந்து வந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

  பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பள்ளி திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரீசலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  மேலும் கொரனா பரிசோதனை தடுப்பூசி செலுத்திக் கொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்திட வேண்டும்.ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைக் அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்திடமும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வலியுறுத்தும். ஒரு நாளை நகர்த்தவே மிகவும் திமுகவினர் கஷ்டப்படுகிறார்கள். திமுகவின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிக்கனி பிரகாசமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: