தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் - தேமுதிக தீர்மானம்

டாஸ்மாக்

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 • Share this:
  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

  கூட்டத்தில், தமிழக அரசு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று டெல்லி போராட்டத்திற்கு குழு அமைத்து தீர்வு காண மத்திய அரசுக்கு வலியுறுத்துவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய நடராஜனை பாராட்டி தீர்மானம் என மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: