முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விமானத்தில் பயணிக்கும் முன் இதை படிங்க... தமிழக அரசின் விதிமுறைகள்

விமானத்தில் பயணிக்கும் முன் இதை படிங்க... தமிழக அரசின் விதிமுறைகள்

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10 வயதிற்கு குறைவாக உள்ள பயணிகளுடன் வருபவர்களை விமானநிலையத்தில் இனி தனிமைப்படுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10 வயதிற்கு குறைவாக உள்ள பயணிகளுடன் வருபவர்களை விமானநிலையத்தில் இனி தனிமைப்படுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசி ஆர் சோதனை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

விமானங்கள் இயக்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

• கொரோனா அறிகுறிகள் உள்ள யாரும் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை.

• மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கண்டிப்பாக எடுக்கப்படும்.

• சோதனையில் கொரனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் .

• பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ பாஸ் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

• ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அறிகுறி இருப்பின் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

• தொழில் சம்பந்தமாக விமானம் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

• அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்.

Also see...

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் - முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற தேதி அறிவிப்பு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Flight, Passengers, Tamil Nadu govt