ரேஷன் கடை மளிகை பொருட்கள் காலாவதி ஆனதா? ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடை

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 14 வகையாக மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்த பொருட்களில் சில பொருட்கள் காலாவதியாகி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்கவும், பொருட்களின் தரத்தை உறுதி செய்திடவும் , குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... மிளகு வரத்து குறைந்ததால் இருமடங்கு விலை உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் பொருட்களின் தரம், இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வில் காலாவதியான பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதோடு, காலாவதியான பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்து மண்டல பொறுப்பாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published: