Home /News /tamil-nadu /

இரு மொழி கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர் உரை

இரு மொழி கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர் உரை

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Tamil Nadu Assembly : நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என ஆளுநர் தமது உரையில் தெரிவித்தார்.

  இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் தமிழகத்தில் தனி அதிகாரம் படைத்த மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்படும் எனவும் ஆளுநர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் இன்று உரையாற்றினார். அப்போது அவர் இது குறித்து தமது உரையில், தமிழ் மொழியை போற்றி அதன் தன்மையை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு உறுதியாக உள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் மூலம் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். ஜன 12 அயலகத் தமிழர் நாளாக சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

  பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீர் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்ற என இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். கல்வி நிறுவனங்களின் அருகில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

  சுயமரியாதை ,சமூக நீதி சமத்துவம், பகுத்தறிவு, அன்புடமை போன்ற தத்துவங்கள் இந்த அரசு கடைப்பிடித்து வருகின்றது பெரியார், அம்பேத்கர், காமராஜர் ,அண்ணா ,கலைஞர் ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடங்களை தீர்மானிக்கின்றன.

  சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளோருக்கு சுய மரியாதை கண்ணியம் மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்துவதே திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தம் முதலமைச்சர் நரிக்குறவர் இருளர் ஆகியோர் குடும்பங்களின் இருப்பிடத்திற்கே சென்று அவளுடைய தேவைகளை நிறைவேற்றியது போன்ற செயல்கள் விளிம்பு நிலையில் உள்ளோர் மீது அவர் வைத்திருக்கும் தனிப்பட்ட அக்கரையை வெளிப்படுகின்றது.

  மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் தரத்தையும் மேம்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது கலை மற்றும் அறிவியல் பொறியியல் கல்லூரிகள் அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் பயனடையும் வகையில் உயர்தர தகவல் தொழில்நுட்ப தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

  மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து உயர் கல்வி பாடத் திட்டத்தை மறுசீரமைக்கும் அரசு முயற்சி செய்து வருகின்றது இது தவிர தொழில் துறையின் உதவியுடன் பல் தொழில் நுட்பக் கல்லூரிகள் பாடத்திட்டத்தையும் ஆய்வக வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  Read More : தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்.

  Must Read : அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

  நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது. நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Governor, MK Stalin, RN Ravi, TN Assembly

  அடுத்த செய்தி