முழு ஊரடங்கிலும் ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி

ரேஷன் கடை

வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைக் கொண்டு செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது.

 • Share this:
  தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின்போது நியாய விலைக் கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை வார நாட்களில் பகுதி நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பகுதி நேர ஊரடங்கு காலத்திலும் ஒரு நாள் கொரோனா தொற்று 35 ஆயிரத்துக்குக் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

  அதனால் மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிட்ட அரசு, வங்கிகள், ஏடிஎம்-கள், பெட்ரோல் நிலையங்கள் செயல்படலாம் என அறிவித்தது. வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைக் கொண்டு செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது.

  Also Rad : கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக் கூடாது

  இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம் என தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: