பொங்கல் மற்றும் தைப்பூசத்தை ஒட்டி தமிழ்நாட்டில் ஜனவரி 17ஆம் தேதி திங்கள் கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 17 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Must Read : பொங்கலுக்கு பின் தொடர்ச்சியாக முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்று சொந்த ஊர்களில் இருந்து பணிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.