2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பரேவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி பயிர்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
Also Read : கூட்டுறவு வங்கி நகைக்கடன் குறித்து சட்டசபையில் விளக்கம்
அதேபோல், நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.