இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழ்நாட்டின் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறுவதற்கு திட்டம்.

  • Share this:
    தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

    தமிழ்நாட்டின் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெறுவதற்கும், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் செலவைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரமும், 3 ஆயிரம் மெகாவாட் நீரேற்று புனல் மின்சாரமும் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் எரிவாயு மின்சாரமும் என மொத்தம் 25 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது.

    இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்படுள்ளது.இது தொடர்பாக இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபு சாரா எரிசக்தி துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாளுகின்ற யுக்திகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும். மேலும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், சந்தை ஆய்வு, திட்ட மேம்படுத்துதல், ஒப்பந்தப்புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் ஆகியவை தொடர்பாக தனது மேம்பட்ட ஆலோசனைகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கும்.

    இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி,

    Must Read : தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

    இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் குமார் தாஸ், இயக்குநர் (தொழில்நுட்பம்) சிந்தன் நவீன்பாய் ஷா, துணை மேலாளர் ஆயுஷ் கந்தல்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: