பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும்படி பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்படி, அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பல்வேறுசமுக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில், “செல்வமகள் சேமிப்பு திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம்.
முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின்போதோ அல்லது 21 வயது நிறைவடையும் போதோ பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு உண்டு.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Must Read : உங்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்ததா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோர்களின் வசதிக்காக, சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் சிறப்புக் கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.