கடையின் பின்பக்க சுவரை உடைத்து மதுபானக் கடையில் திருடிய கொள்ளையர்கள்...கையும் களவுமாக கைது

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடர்களை கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்தனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் கல்லல் ரயில்வே கேட் அருகில் நேற்று இரவு 8 மணி அளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக காட்டுப் பகுதியில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

  போலீசார் கண்டதும் மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கடப்பாரையால் தாக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் கல்லல் காட்டுப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மதுபானங்களை திருடியது தெரியவந்தது.  மேலும் இந்த அரசு மதுபான கடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடையின் பூட்டை உடைத்து 32,400 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களையும் கடந்த 14 ஆம் தேதி 11,240 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களையும் திருடிச் சென்றதாக தெரிவித்தனர்.

  Also read :  கல்லில் 2 அடியில் நாதஸ்வரம், சங்கு, சங்கிலி... சாதனைப்படைத்த தென்காசி சிற்பக் கலைஞர்

  அதுமட்டுமன்றி அப்பகுதியைச் சுற்றி நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் தற்போது காவல்துறையில் சிக்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: