ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வீர விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 18, 2020, 10:22 AM IST
  • Share this:
தகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் சிறப்பாகச் செய்திருந்தன. அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் சிறந்த காளையின் உரிமையாளர்க்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்த வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் கார் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் “ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ ஜல்லிக்கட்டைப் போல் தமிழர்களுடைய மற்ற வீர விளையடடுகளையும், கலை மற்றும் கலாச்சாரத்தையும் அதிமுக அரசு பாதுகாக்கும். கிராமப்புற இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வீர விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
 
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்