அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் அரசாணை வெளியீடு

மாதிரிப் படம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 • Share this:
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி முதல், சில அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 31-ம் தேதி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

  இந்நிலையில், நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை கைவிடுவதாக கடந்த ஒன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

  இதுதொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள், நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் உடனடியாக கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க...அதிமுக-வை பின்னடைய செய்ய சிலர் முயற்சி: முதல்வர் பழனிசாமி காட்டம்  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: