தென்தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், தற்போதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவாகவே பெய்துள்ளது. இன்று காலையில் நீர் தேங்கியுள்ள இடத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது நீர் நிலைகளில் நிலையைக் கண்கானித்து கொண்டிருக்கின்றோம் என்றார்.
நாளை காலை அனைத்து அதிகாரிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறிய அவர், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் நிலை உள்ளதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்தார். மேலும், வேளாண் துறையின் அறிவிப்புகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பதற்கோ மழையை ரசிப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
தென் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரிவான முன்னெச்சரிக்கை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலில் வேளாண் துறை தயார் நிலையில் இருந்ததால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மனித உயிரிழப்புகள் இல்லாமல் நிவர் புயலைக் கடந்துள்ளோம்.
டி.என் சுமார்ட் என்ற செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்தியக் குழு நாளை மாலை முதலமைச்சருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் உதயகுமார், மீட்புபடையினர் திருநெல்வேலி மூன்று குழு கன்னியாகுமரியில் இரண்டு குழு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் சென்னையில் 3000 இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழ்நிலை இருந்தது தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் 100 க்கும் குறைவான இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் வெள்ளம் வருவதற்கு முனபாகவே முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வானத்தை கீழே கொண்டு வைத்தாலும் அதற்கு ஒரு குறை சொல்லுவார் ஸ்டாலின். குறை கூறி அரசியல் செய்வதே ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் என்று கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.