வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கழிவினால் வளங்கள் பாதிப்பா: தமிழக அரசு ஆய்வு!

அனல்மின் நிலையம்

மீனவர் நலன்பாதிக்கும் எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • Share this:
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கழிவினால் மீன்வளம் மற்றும் கடல் வளம் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வரும் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங்கள் எவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றும், மீனவர் நலன் காக்கும் மற்றும் விவசாயிகள் கால்நடை சார்ந்த நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும் என்றும் வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: அங்கன்வாடிகளை திறக்க தமிழக அரசு முடிவு - மாணவர்களுக்கு வீடுதேடி சத்துணவு!


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற சம்பவம் சார்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த அவர்,  புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணாமலை தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு  மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்று கூறி சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது இது சம்பந்தமாகமத்திய அரசிடமே நடவடிக்கை எடுக்க உரிமை வழங்கி இருக்கிறோம்’ என்று கூறினார்.



தமிழக முதலமைச்சர் தெரிவித்த அனைத்து திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
மீனவர்கள் சுருக்குமடி பயன்படுத்துவது சம்பந்தமான புகார்கள் தமிழக அரசிற்கு வந்திருக்கிறது அந்த புகார்கள் சம்பந்தமாக தமிழக முதல்வர் துறை அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை அளித்துள்ளார்.  இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார். மீனவர் நலன்பாதிக்கும் எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் உறுதிப்பட அவர் கூறினார்.

மேலும் படிக்க: கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கல்லூரிகள்: திமுக அரசின் அடுத்த அதிரடி!


வடசென்னையில் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் அந்த கடற்கரை பகுதியில் உருவாக்கக் கூடிய மீன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: