45 நாட்களுக்கு பிறகு குணமான கொரோனா நோயாளிகள்.. வெண்டிலேட்டர் சிகிச்சையிலிருந்து காப்பாற்றிய அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள்

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பேரில் தற்போது 3 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்ப உள்ளனர்.

  • Share this:
கொரோனா  பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 நபர்கள் 45 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது குணமடைந்துள்ளனர். இவர்களை மருத்துவர்கள் மலர் கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டவதால் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வருபவர்கள் சதவிகிதம் மிகவும் குறைவு என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடுமையான நுரையீரல் பாதிப்பும், சுவாச பிரச்சனையுடன் கடந்த மாதம் 38 வயதான கீதா, 32 வயதான ஸ்ரீதர், மற்றும் 24 வயதான சர்குணம் ஆகியோருக்கு  வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பேரில் தற்போது 3 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்ப உள்ளனர். இவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

 
Published by:Ramprasath H
First published: