மாநில உரிமையில் தலையிடும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது - கனிமொழி

மாநில உரிமையில் தலையிடும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது - கனிமொழி

கனிமொழி எம்பி.

மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது எனவும், அதைத் தட்டிக்கேட்க திறன் இல்லாமல் அதிமுக அரசு இருக்கின்றது எனவும் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.

  • Share this:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பிரிவில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, கூட்டத்தினர் மத்தியில்  பேசினார்.

அப்போது மத்திய பா.ஜ.க ஆட்சி மெஜாரிட்டி இருக்கும் ஒரே காரணத்திற்காக, விவசாயிகளை அழைத்துப் பேசாமல் அவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விவசாய விரோதச் சட்டங்களை இயற்றியுள்ளது எனக் குற்றம்சாட்டினார். மேலும், கூறுகையில், பா.ஜ.க கூட்டணியில் இருந்த அகாலிதள அமைச்சர், இந்தச் சட்டத்தை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. எல்லாக் கட்சிகளும் எதிர்த்த நிலையில், யாரும்  வரவேற்காத இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருக்கின்றது என தெரிவித்தார்.

நாட்டிலேயே இச்சட்டங்களை வரவேற்ற ஒரே தலைவர், தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் என்று கூறிய கனிமொழி, இது  விவசாயிகளுக்கு செய்யும் பெரிய துரோகம். ஜெயலலிதா காலில் விழுந்து அமைச்சர் பதிவியும், சசிகலா காலில் விழுந்து முதலைமைச்சர் பதவியும், தற்போது முதல்வர் பதவி நீடிக்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா காலில் விழுந்து தன் பதவியைக் காப்பாற்றி வருகிறார் என்றார்.

Also read: இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!

வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்காத நிலை ஏற்படும் எனவும், அரசு கொள்முதல்  செய்யும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இல்லாமல் போகும் எனவும் தெரிவித்தார். விவசாயிகள் கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தம் போடலாம் என்கின்றனர். ஆனால் இதற்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மோசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் வட இந்திய விவசாயிகளிடம்  உருளைக் கிழங்கை கொள்முதல் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் விளைவித்த பின்னர் அவை தரமில்லை எனக் கூறி கார்ப்பரேட் நிறுவனத்தினர் வாங்க மறுத்தனர். ஒப்பந்தத்தை கார்ப்பரேட் நிறுவனம்  மீறினால் விவசாயியால்  வழக்கை நடத்த முடியாது. விவசாயி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சண்டையிட முடியாது. இந்தியாவில் விவசாயிகள் எந்த பயிரை விளைவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதை கார்ப்பரேட்டுகளிடம்  விடவேண்டிய நிலை மோசமானது. உணவுப் பாதுகாப்பு மட்டுமே நாட்டுக்கு முக்கியமானது என்று தெரிவித்தார்.

Also read: திராவிட கட்சிகளை வீழ்த்த ரஜினிக்கு மேடை அமைக்கிறதா பாஜக!

வெங்காயம், பருப்பு, எண்ணெய், விதைகள் போன்றவை பாதுகாக்கப்பட்ட உணவு கிடையாது என்கின்றது இந்த வேளாண் சட்டங்கள் என தெரிவித்த கனிமொழி, விவசாயிகளுக்கும், மாநில அரசாங்கத்திற்கும் எதிரான சட்டங்களாக மத்திய வேளாண் சட்டங்கள் இருக்கின்றன. விவசாயம், சந்தை என்பன மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் மத்திய அரசு தலையிட்டு இருக்கின்றது. இதைத் தட்டிக்கேட்க திறன் இல்லாமல் இருக்கின்றது அதிமுக அரசு. இந்த 3 வேளாண் சட்டங்கள் தூக்கி எறியபடும் வரை திமுக தொடர்ந்து போராடும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: