செங்கோட்டையை சேர்ந்தவர் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் நடத்துனர் ஈஸ்வரன் இருவரும் செங்கோட்டை அரசு விரைவு பேருந்து பணிமனையில் பணியாற்றி வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து பெங்களூர் செல்வதற்காக அரசு விரைவு பேருந்து 35 பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. அப்போது திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதிக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவாறு வந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர்.
இதில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஓட்டுநர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் நகர் பகுதியில் 2-ஆவது நாளாக 20% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க... Madurai AIIMS | மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்காததற்கு காரணம் என்ன?
மேலும் அரசு போக்குவரத்து பணிமனையில் புதிதாக வெளியாட்களை வைத்து பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. புதிய ஆட்களை வைத்து பேருந்தை இயக்கினால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Thirumangalam