ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

5 சவரனுக்கு உட்பட்ட கூட்டுறவுவங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை: தமிழக அரசு விளக்கம்

5 சவரனுக்கு உட்பட்ட கூட்டுறவுவங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை: தமிழக அரசு விளக்கம்

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 376 விலை உயர்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 376 விலை உயர்ந்துள்ளது.

ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவுவங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரித்தது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை. இந்நிலையில், 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதேவேளை ஏழைகள் மட்டுமே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக் கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கடந்த மாதம் கோரியது. அதிமுக ஆட்சியில், நகைக்கடன்களிலும் தவறுகள் நடைபெற்றுள்ளது என்பதை அமைச்சர் விளக்கி பேசியதாகவும், எனவே, நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமாக மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சுற்றறிக்கை

Must Read : போஸ்ட் ஆஃபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருக்கா? அப்ப நீங்க இந்த தகவலை தெரிஞ்சிக்கிறது முக்கியம்!

அதன்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Gold loan, News On Instagram, TN Govt