ரூ.1 லட்சம் கோடி நிவாரணத்தை மத்திய அரசு மக்களிடம் சேர்க்கவில்லை - ப.சிதம்பரம்

"நோயைப் போராடி வெல்லுவதற்கு பல லட்சம் கோடி ரூபாயும் நெஞ்சுறுதியும் வேண்டும். இவை இரண்டும் அரசிடம் குறைவாக இருப்பதைப் போல் தெரிகிறது."

  • Share this:
ரூ.1 லட்சம் கோடி நிவாரணத்தை மத்திய அரசு மக்களிடம் சேர்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவு: ”25.3.2020 ஆம் நாள் அன்று ரூ.1 லட்சம் கோடி நிவாரணத் திட்டத்தை அறிவித்து விட்டு, அந்தப் பணத்தையும் இன்னும் மக்களுக்குச் சேர்க்காமல், மத்திய அரசு கையை விரித்துவிட்டது.

முதல் அறிவிப்பில் விடுபட்ட பிரிவுகளுக்கு (அவர்கள் ஏராளம்) நிவாரணமே கிடையாதா? இந்தப் பாரபட்சத்தைத் தட்டிக் கேட்க வேண்டாமா?
இந்தத் தொற்று நோயைப் போராடி வெல்லுவதற்கு பல லட்சம் கோடி ரூபாயும் நெஞ்சுறுதியும் வேண்டும். இவை இரண்டும் அரசிடம் குறைவாக இருப்பதைப் போல் தெரிகிறது.”

Also see:
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading