Home /News /tamil-nadu /

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ABVP மாணவ அமைப்பினரை சந்தித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ABVP மாணவ அமைப்பினரை சந்தித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்

மருத்துவர் சுப்பையா

மருத்துவர் சுப்பையா

ABVP Protest : புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏபிவிபி மாணவ அமைப்பினரை சந்தித்ததாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு போராடிய ABVP அமைப்பினர் 37 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மருத்துவர் சுப்பையா சந்தித்துப் பேசினார். அரசு ஊழியருக்கான விதிகளை மீறி சிறையில் உள்ளவர்களை பார்த்ததாக, மருத்துவர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த மருத்துவக் கல்வி இயக்ககம், துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருகிறது.

    மருத்துவர் சுப்பையா மீது, 2020ஆம் ஆண்டில் தனது குடியிருப்புக்கு அருகில் இருந்த பெண் வீட்டின் முன்பு அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2017 முதல் 2020ஆம் ஆண்டுவரை ஏ.பி.வி.பி. தேசிய தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா, தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான குழுவில் உள்ளார்.

    மருத்துவர் சுப்பையா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த பிரச்சனையில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    போலி முகவரி:

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏபிவிபி மாணவ அமைப்பினரில் 35 பேரில் 12 பேர் விசாரணையின் போது போலி முகவரிகளைக் கொடுத்ததிருப்பதும், போலி கையெழுத்திட்டதும் தெரியவந்துள்ளது. ஏபிவிபி அமைப்பினர் கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், ஏபிவிபி அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    இதனால், இவர்கள் மீது தேனாம்பேட்டை போலீசார், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்களை பிப்ரவரி 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    Must Read : நாகதோஷம் கழிக்க கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மரணம்.. சாமியாரிடம் கிடுக்கிபிடி விசாரணை

    இதனையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்காக நீதிமன்றத்தில் ஏபிவிபி அமைப்பினரால் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 12 பேர் போலீசாரின் விசாரணையில் தங்களது முகவரியை தவறாகக் கொடுத்தது தெரியவந்ததுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்களின் கையெழுத்து போலி என்பதும் தெரியவந்தது.

    5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு :

    இதனால், அவர்கள் மீது போலி கையெழுத்து இடுதல், மோசடி ஆவணத்தை பயன்படுத்தல், பொய்யாகப் புனையப்பட்ட ஆவணங்கள் சமர்பித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் தங்கள் அடையாளங்களை மறைக்க முயற்சித்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ABVP, Puzhal jail

    அடுத்த செய்தி