Home /News /tamil-nadu /

போலீசாரை அநாகரிகமாக பேசி சோதனைச் சாவடியில் மருத்துவர் தகராறு - வீடியோ

போலீசாரை அநாகரிகமாக பேசி சோதனைச் சாவடியில் மருத்துவர் தகராறு - வீடியோ

Youtube Video

தேனியில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர்களை அரசு மருத்துவர் ஒருவர் அநாகரீகமாக பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி மாவட்டம் உத்தமபாளயத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சாலமன்ராஜா. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமணையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் சனிக்கிழமை தனது ரெனால்ட் டஸ்டர் காரில் உத்தமபாளையத்திலிருந்து திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு பயணம் செய்துள்ளார். அப்போது மாவட்ட எல்லைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள அரளியூத்து சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனை செய்தவர்கள், மருத்துவர் சாலமன் ராஜா வாகனத்தையும் மறித்துள்ளனர்.

    ஓரமாக நிறுத்தி ஆவணங்களை காட்டுமாறு கூறி உள்ளனர். ஆனால் சாலையின் நடுவில் காரை நிறுத்திய சாலமன்ராஜா, தான் யார் தெரியுமா என்று ஐடி கார்டை எடுத்துக் காட்டியுள்ளார். யார் என போலீசார் கேட்டபோது, ஐ.டி. கார்டை பார்த்து தெரிந்துகொள்ளுமாறு கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மருத்துவர் என தெரிந்ததும், செல்லுமாறு போலீசார் கூறியும் போகாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு சமாதானமாகி தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை திருமங்கலத்தில் இருந்து குடும்பத்தினருடன் தேனி திரும்பியுள்ளார்.

    அப்போது சோதனைச் சாவடியில் எதிர்திசையில் வந்ததால் காவலர்கள் வாகனத்தை மறித்துள்ளனர். அப்போதும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவலர்களை தாக்கவும் அரசு மருத்துவர் சாலமன்ராஜா முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு வழியாக குடும்பத்தினர் மருத்துவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவை பணியிலிருந்த காவலர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகக்கூறி மருத்துவர் சாலமன்ராஜாவை தாக்க உறவினர்கள் படை திரண்டு சென்றனர்.

    அப்போது மருத்துவமனைக்குள் அவர் பதுங்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    அதேபோல் மருத்துவமனைக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியது மட்டுமல்லாமல் கேமராவையும் சேதப்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானர்.

    இது குறித்து அப்போதே திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவும் செய்யப்பட்டது.

     

    தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அவர்களது உறவினர்களிடமும் மரியாதை இல்லாமல் பேசி வருவதாக சாலமன்ராஜா மீது புகார் எழுந்த நிலையில், தற்போது போலீசாரை தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் படிக்க...

    கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Doctor, Theni

    அடுத்த செய்தி