• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடும்ப தகராறில் அரசு பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை!

குடும்ப தகராறில் அரசு பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை!

டாக்டர் வளர்மதி

டாக்டர் வளர்மதி

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக அரசு பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம், எஸ்.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வளர்மதி. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

இவரது கணவர் மகரஜோதி அதே மருத்துவமனையில் எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ரிஷித் என்ற மகனும் 4 வயதில் ஓமிஷா என்ற மகளும் உள்ளனர்.

கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி, குடும்ப தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் மகன் ரிஷித் சைக்கிளில் பள்ளி செல்ல கூடாது என வளர்மதி கூறி வந்துள்ளார். ஆனால் நேற்று ரிஷித் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

இதனால் கணவன் -மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடடைந்த வளர்மதி, படுக்கை அறையில், ஜன்னலில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... இளம்பெண்ணை சித்ரவதை செய்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: