• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பந்தாடப்படுகிறார்களா அரசுக் கல்லூரி ஆசிரியர்கள்? 4 மாதங்களாக சம்பளம் இன்றி தவிப்பு

பந்தாடப்படுகிறார்களா அரசுக் கல்லூரி ஆசிரியர்கள்? 4 மாதங்களாக சம்பளம் இன்றி தவிப்பு

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 700 பேர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

  • Share this:
நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழக்கத்தை விட கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அரசு கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் இல்லாத நிலையும் ஊதியம் கொடுத்ததால் பல்கலைக்கழகத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் சூழலும் நிலவுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உட்பட 10 உள்ளன. இவற்றில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 700 பேர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊதியம்  வழங்க வலியுறுத்தி கல்லூரி கல்வி இயக்குநர், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு. தொடர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் , கருப்பு பட்டை அணிந்து பணியாற்றியது, உள்ளிருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. பல்கலைக்கழகமும் உயர்கல்வித்துறையும் எங்களை பந்தாடுகின்றன.

இதனால், மளிகை செலவு, குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு கடன் வாங்கும் நிலையில் உள்ளோம். ஒரு பேராசிரியரின் மனைவி தன்னுடைய கணவரையே பிரிந்து சென்று விட்டார். கல்லூரி பேராசிரியர் என்றுதான் பேரு, ஆனால் அன்றாட செலவிற்கே அல்லாடுகிறோம் என்று பேராசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அரசுக் கல்லூரி கவுரவ விரிவரையாளர்கள்.

இந்த நிலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்கப்பட்டு அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 44 கல்லூரிகளில் உள்ளது. ஆனால், அதிக எண்ணிக்கை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளாக உள்ளன. குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு 4 கல்லூரிகளும், கடந்த ஆண்டு 6  என பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் அரசு  கல்லூரிகளாக்கப்பட்டன.  துவக்கத்தில்,  பல்கலைக்கழகங்களே ஊதியத்தை வழங்க வேண்டும். அதை  அரசு திரும்ப வழங்கி விடும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி பல்கலைக்கழகமும் கடந்த நிதியாண்டி முடியும் வரை ஊதியம் வழங்கியது. ஆனால் தற்போது வரை ஒரு பைசா கூடா திரும்ப வரவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தில்ல நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே,  பல்கலைக்கழக நிதியில் இருந்து அரசுக் கல்லூரிகளுக்கு  ஊதியம் வழங்க கூடாது. அரசே நேரடியாக வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளாக அறிவித்து அரசு ஊதியம் வழங்க மறுப்பது ஏன்?  என்று பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கூறிய பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு செயலாளர் க.பன்னீர்செல்வம், பல்கலைக்கழக நிதி ரூ. 254 கோடி வரை அரசு கல்லூரிகளுக்கு செலவளிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு கல்லூரிகளுக்கு அரசே ஊதியம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், கல்லூரி ஆசிரியர்களுக்கு யுஜிசி (UGC) அறிவுறுத்தலின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 50,000 வழங்க வேண்டும், கவுரவ விரிவுரையாளர் பணியில் பாரப்பட்சம் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் (AUT) அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி  வருகின்றனர்.

Must Read : 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒருபக்கம்அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.  மறுபக்கம் , இவர்களுக்கு ஊதியம் அளித்ததால், பல்கலைக்கழகத்தில் நிதியில்லை என்று கூறும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு.  இரண்டையும் கவனத்தில் கொண்டு அரசு தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: