Home /News /tamil-nadu /

பேரிடர் காலத்திலும் அரசு கூடுதல் மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

பேரிடர் காலத்திலும் அரசு கூடுதல் மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறது - வைகோ குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு கூடுதல் மின்சாரக் கட்டணம் வசூலிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

    கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு கூடுதல் மின்சாரக் கட்டணம் வசூலிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாதந்தோறும் மின் பயன்பாட்டை குறிப்பதற்கு ஆள் பற்றாக்குறை, நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், கூடுதல் கட்டணம் வாங்குவதை நியாயப்படுத்த முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.

    இத்தகைய நடைமுறையால் கோடை காலத்தில் 550 யூனிட் மின்சாரத்துக்கு 2,140 ரூபாய்க்கு பதிலாக 3,770 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு, மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி மக்களைச் சுரண்டும் நிலைக்கு தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Electricity, Mdmk leader vaiko

    அடுத்த செய்தி