Home /News /tamil-nadu /

தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் உணவத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை - அமைச்சர் நடவடிக்கை

தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் உணவத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை - அமைச்சர் நடவடிக்கை

அரசு பேருந்து

அரசு பேருந்து

Government Bus | பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு M/S Star Associates, salem நிறுவன ஒப்பந்ததாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் அதிகவிலை பெறுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்னுக்கு புகார் வந்துள்ளன. இதையடுத்து இது தொடர்புடைய ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு M/S Star Associates, salem நிறுவன ஒப்பந்ததாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத காரணத்தால் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இன்று காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    Also Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

    மேலும் உடனடியாக மேற்கண்ட M/S Star Associates, salem ஒப்பந்ததாரர் அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்தாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: SETC, TN Govt

    அடுத்த செய்தி