Home /News /tamil-nadu /

போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்? அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் அறிவிப்பு...

போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்? அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் அறிவிப்பு...

போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நாளை முதலே வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

    அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். அதன்படி, கோரிக்கைகள் குறித்து 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

    Also see... விளையாட்டு வீரர்களுக்கு என தனி காப்பீடு திட்டம் - அமைச்சர் மெய்யநாதன்

    ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீர்வு கண்டு வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    முன்னதாக, ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus, Bus Strike, Government

    அடுத்த செய்தி