மேகமூட்டத்தால் 30 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து.. பயணிகள் உயிர்தப்பினர்

மேகமூட்டத்தால் 30 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து..  பயணிகள் உயிர்தப்பினர்
30 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து
  • News18
  • Last Updated: October 22, 2019, 5:25 PM IST
  • Share this:
உதகை அருகே கடும் மேக மூட்டம் காரணமாக 30 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து இறங்கியது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக 13 இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவும் ஏற்பட்டது. மண்சரிவு மற்றும் மரங்கள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அங்கு மெதுவாக  போக்குவரத்து தொடங்கியுள்ளது.


இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான மேகமூட்டத்தினிடையே சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து, காட்டேரி பகுதி அருகே, எதிரே வந்த லாரிக்கு வழி கொடுக்க முயன்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தில் இறங்கியது.

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 12 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக 210 அடி  கொண்ட  அப்பர் பவானி அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால்,  அத்திக்கடவு , பில்லூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.Also see...

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading