மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் தேர்வுக்கு அரசின் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
2023ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு (Preliminary Examination 2023) எழுதுவதற்கு, அகில இந்தியக் குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம், சென்னை, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சிபெற ஆர்வமிக்க தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணையதள வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கூடுதல் தகவலுக்கு : www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அப்படி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளவழி விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள் : 07/10/2022
இணையவழி விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் : 27/10/2022
தேர்வு நடைபெறும் நாள் : 13/11/2022 காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chief Secretary, TN Govt, UPSC