Home /News /tamil-nadu /

அரசு பணியாளர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக அரசு

அரசு பணியாளர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக அரசு

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. நாளைமுதல் இவை அமலுக்கு வருகின்றன.

    இவற்றுடன் தடுப்பூசி தொடர்பாகவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

    அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?


    இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).  கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்,

    மேலும் படிங்க:TN night curfew:தமிழகத்தில் நாளைமுதல் இரவு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு


    வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்கவும்  முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine, Government Employees, Tamilnadu government

    அடுத்த செய்தி