ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுகவின் கைபாவையாக ஆளுநர் இருக்க மாட்டார்- எல்.முருகன்

திமுகவின் கைபாவையாக ஆளுநர் இருக்க மாட்டார்- எல்.முருகன்

கவர்னருக்கு ஆதரவாக பேசிய எல்.முருகன்

கவர்னருக்கு ஆதரவாக பேசிய எல்.முருகன்

புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்கலாமா..?  என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகிகள் பங்கேற்பது தவறு இல்லை என பதிலளித்தார் அமைச்சர் எல்.முருகன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழக ஆளுநர் தனது கருத்தை சொல்ல முழு சுதந்திரம் இருக்கிறது என்றும் திமுகவிற்கு கண்மூடி கையெழுத்து போடும் வேலை தமிழக ஆளுநருக்கு இல்லை என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், புதுச்சேரிக்கு சிறப்பு கொடையாக 1400 கோடி ரூபாயை மத்திய அரசு  அளித்துள்ளது. இது மிக பெரிய வரபிரசாதம் என்றும் சிறப்பு முகாம் மூலம் 10,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட இருக்கிறது. இதில்  முதல் கட்டமாக 1400 பேருக்கு வேலை  வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் வில்லியனூர் மற்றும் ஏனாமில் ஆயூஷ் மருத்துவமனை துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய இணை அமைச்சர் முருகன், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதும் அவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது. இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கையில் அரசியல் சூழல் காரணமாக காலதமதமாகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்கலாமா..?  என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகிகள் பங்கேற்பது தவறு இல்லை என பதிலளித்த அமைச்சர்,

தமிழக ஆளுநர் தனது கருத்தை சொல்ல முழு சுதந்திரம் இருக்கிறது. நீட்டிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும் என திமுக நினைக்கிறது. அதில் சில சந்தேகம் கேட்டால் ஆளுநரை மாற்ற திமுக நினைக்கிறது. திமுகவிற்கு கண்மூடி கையெழுத்து போடும் வேலை தமிழக ஆளுநருக்கு இல்லை என தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து செயல்படும் சிறப்பான ஆட்சி  நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆளுநர் கேள்விகளை கேட்கிறார்., திமுகவின் கைப்பாவையாக ஆளுநர் இருக்க மாட்டார். அதனால் அவரை மாற்ற சொல்கிறது திமுக. இதே நிலை மற்ற மாநிலங்களில் இருக்கிறது என இணை அமைச்சர்  எல்.முருகன்  தெரிவித்தார்.

Published by:Raj Kumar
First published:

Tags: DMK, L Murugan, Puducherry, RN Ravi