திமுகவினர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சிஆர்பி சட்டம் தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல.... பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது அனைத்து மாநிலங்களிலும் இந்த சிஆர்பிசி சட்டம் செல்லும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் காவல்துறை, 124 ஏ சட்டப்பிரிவில் மாரிதாஸ் மேல் வழக்கு தொடுக்கின்றனர். திமுகவினர் ராணுவ அதிகாரி இறந்தபோது பிபின் ராவத்தை கொன்றவர் யார்? என்றும் ராணுவத்தைக் கேலி செய்தும், திமுகவின் ஊடகப்பிரிவினரும், திமுகவின் நிர்வாகிகளும் வெளியிட்ட, அந்த 300க்கும் மேற்பட்ட குறுஞ் செய்திகளின் பதிவு எங்களிடம் இருக்கிறது.
தி.க அல்லது திமுகவினர் அவதூறு பரப்பினால் காவல் துறை தன் கண்களை மூடிக்கொள்கிறது. ஆனால் ஒரு தேசியவாதி கருத்து சுதந்திரத்துடன் தவறை சுட்டிக்காட்ட விரும்பினால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது. திமுக அவதூறு பரப்பியதற்கு நான் ஆதாரம் தருகிறேன். நடுநிலையாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்க மாநில அரசு தயாரா?
தமிழக டிஜிபியின் நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக மாறிப் போனது. ராணுவத்தின் உயர் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கிண்டல் செய்து ட்வீட்டரில் செய்திகள் வெளியிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா டிஜிபி அந்த செய்திகளெல்லாம் அவர் கண்ணில் படவில்லையா? அப்புறம் என்ன அவர் என்ன டிஜிபி ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தது யார்? அரசு அதிகாரியா? அல்லது போலீசின் சூமோட்டோ வழக்கா?, திமுகவின் ஊடக பிரிவில் இருக்கும் சின்னப் பையன்களின் புகார்களை கையிலெடுத்து மாரிதாஸ், கல்யாணராமன் போன்றோரை யெல்லாம் கைது செய்து ஆளும் கட்சியின் ஏவலராக போலீஸ் செயல்படுகிறது.
மாரிதாசை விசாரித்த நீதுபதி போலீசிடம் கேட்டதென்ன.... இதெல்லாம் ஒரு கேசா... பேச்சு எழுத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறதா என்று நீதுபதி எதிர் கேள்வி கேட்டுள்ளார். மாரிதாஸ் போட்ட செய்தியில் என்ன தவறு இருக்கிறது.
திமுகவினர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சி ஆர் பி சட்டம் தமிழகத்திற்கு மட்டுமான சட்டமல்ல.... பாரதிய ஜனதா கட்சி 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது அனைத்து மாநிலங்களிலும் இந்த சிஆர்பிசி சட்டம் செல்லும்.
முன்னுதாரணமாக நீங்களே மாரிதாஸ் மீதும் குண்டர் சட்டத்தை ஏவி இருக்கிறீர்கள். இதை திமுகவினருக்கு நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இது எல்லாம் பாரதிய ஜனதா கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Also read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.