கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்
கறுப்பர் கூட்டம்.
  • Share this:
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வழியாக, கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக, செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், சுரேந்திரன் மீது ஏற்கனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரையும் ஜுலை 30 வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also read: ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - சீமான் பெருமிதம்

இதனிடையே கறுப்பர் கூட்டத்தின் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading