• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமிக்கு டூடுள் - தமிழரை கெளரவித்த கூகுள் நிறுவனம்

மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமிக்கு டூடுள் - தமிழரை கெளரவித்த கூகுள் நிறுவனம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வைத்து மரியாதை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

எட்டயபுரத்தில் உள்ள அயன்வடமலாபுரத்தில் பிறந்த மருத்துவர் வெங்கடசாமி, கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தனது கல்லூரி பருவத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்த அவர், வேதியியலில் பட்டம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய அவருக்கு, பர்மா காடுகளில் பணியாற்றிய போது விஷப் பூச்சி கடித்ததில் முடக்குவாத நோய்க்கு ஆளானார்.

இதனைத்தொடர்ந்து நாடு திரும்பியவர் கண் மருத்துவம் பயின்று அந்த பிரிவில் சேவையாற்றினார். சில வருடங்கள் கழித்து அவர் மதுரை அரசு மருத்துவமனையின் கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மதுரையில் முதல்முறையாக 11 படுக்கை வசதியுடன் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கிய அவர், ஜுலை 7, 2006 ஆம் ஆண்டு மதுரையில் காலமானார்.

அவரால் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனை உலகளவில் பல கிளைகளுடன் சிறந்த மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. 1973 –ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், சர்வதேச ஹெலன் கெல்லர் விருது மற்றும் பி.சி.ராய் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Saroja
First published: