ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

உலகின் 99% டேட்டா டிராஃபிக்கை கொண்டு செல்லும் சுமார் 300 கடல் கேபிள்கள் (subsea cables) இன்டர்நெட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.

உலகின் 99% டேட்டா டிராஃபிக்கை கொண்டு செல்லும் சுமார் 300 கடல் கேபிள்கள் (subsea cables) இன்டர்நெட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.

உலகின் 99% டேட்டா டிராஃபிக்கை கொண்டு செல்லும் சுமார் 300 கடல் கேபிள்கள் (subsea cables) இன்டர்நெட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.

  • 2 minute read
  • Last Updated :

ஆசியாவுடன் வளர்ந்து வரும் இணையப் போக்குவரத்தை (internet traffic) கையாள கடலுக்கடியில் கேபிள் சிஸ்டத்தைப் பயன்படுத்த அனுமதி பெறுமாறு ஆல்பாபெட்டின் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் பேரண்ட் நிறுவனமான மெட்டா ஆகியவற்றுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் சமீபத்தில் பரிந்துரை செய்து உள்ளது.

மேலும் தற்போதுள்ள 8,000 மைல் பசிபிக் லைட் கேபிள் நெட்வொர்க்கில் டேட்டாவை அனுப்பவும் பெறவும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம், ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனை (FCC) வலியுறுத்தி இருக்கிறது. கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் (undersea fiber-optic cable system) அமெரிக்கா, தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கை இணைக்கிறது.

கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் உலகின் கிட்டத்தட்ட அனைத்து இன்டர்நெட் டேட்டா டிராஃபிக்கையும் கடத்துகின்றன. மெட்டா நிறுவனம் பிலிப்பைன்ஸ் - அமெரிக்கப் பகுதியை பயன்படுத்த அனுமதி கோரியது. அதே நேரத்தில் தைவானுடன் இணைவதற்கு கூகுள் அனுமதி கேட்டுள்ளது. இதனிடையே குறிப்பாக சீனாவின் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கர்களுடைய டேட்டாக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை (privacy and security of Americans’ data) பாதுகாக்க நிறுவனங்கள் உறுதி பூண்டுள்ளன.

இதையும் படிங்க:  சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு

சீனாவால் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காங்கிற்கு நெட்வொர்க் கேபிளைப் பயன்படுத்துவதற்கான முந்தைய முன்மொழிவை கூகுள் மற்றும் மெட்டாவின் திட்டம் கைவிட்டது. ஏனென்றால் 2020-ல் அந்த திட்டத்தைத் தடுக்க பல அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் பரிந்துரை செய்தன.

அதனை தொடர்ந்து "மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் முக்கியமான தனிப்பட்ட டேட்டாக்களை எடுக்க நினைக்கும் சீனாவின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, கூகுள் மற்றும் மெட்டாவுடன் தேசிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தேவை"என்று அமெரிக்க நீதித்துறை (USA Justice Department ) கூறியது. ஆனால் வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரகம் மற்றும் கூகுள் உடனடியாக இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க:  5G Cars: 5ஜி வசதி கொண்ட கார்கள் உலக அளவில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள்...

தைவான் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் டேட்டா சென்டர்களுக்கு இடையே அதிகரித்து வரும் ட்ராஃபிக்கை கையாள டேட்டா கனெக்ஷன்கள் தேவை என்று கூகுள் கடந்த 2020-ல் கூறியது. இதனிடையே மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், கேபிள் சிஸ்டம் அமெரிக்காவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இன்டர்நெட் திறனை அதிகரிக்கிறது. மக்கள் தொடர்பில் இருக்கவும் கன்டென்டை ஷேர் செய்யவும் உதவுகிறது.

கேபிள்கள் பாதுகாப்பானவை மற்றும் மேம்பட்ட என்கிரிப்ஷன் (advanced encryption) மூலம் டேட்டாக்கள் பாதுகாக்கப்படுகிறது என்றார். ஒப்பந்தங்களின் படி கூகுள் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் முக்கிய டேட்டாக்களுக்கான ஆபத்து குறித்த வருடாந்திர மதிப்பீடுகளை (annual assessments) மேற்கொள்ள வேண்டும், மேலும் அவை 24 மணி நேரத்திற்குள் கேபிள்களில் டேட்டா டிராஃபிக்கை கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியும் வகையில் இருக்கின்றன. உலகின் 99% டேட்டா டிராஃபிக்கை கொண்டு செல்லும் சுமார் 300 கடல் கேபிள்கள் (subsea cables) இன்டர்நெட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.

First published: