கூகுள் மேப்ஸ் பலருக்கும் பல முக்கியமான தருணங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளது. நீங்கள் உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸ் நேவிகேஷனை அமைத்தாலே போதும். எங்கு செல்ல வேண்டுமோ உங்களுக்கு படிப்படியாக வழிகளை காட்ட உதவுவதோடு, டிராஃபிக் பற்றிய தகவல், ஷார்ட் ரூட் உள்ளிட்ட பல தகவலையும் வழங்குகிறது. எல்லா செயலிகளையும் போலவே, கூகுள் மேப்ஸ் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் தான் வேலை செய்யும் என்ற சூழலில், இணையம் இல்லாத இடங்கள் அல்லது நெட்வொர்க் பிரச்சனை இருக்கும் போது, பாதை தெரியாமல் நீங்கள் எங்கேயாவது மாட்டிக்கொள்ளலாம்.
ஆனால், இணையம் இல்லாமலும் நீங்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தலாம். எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
கூகுள் மேப்பை இணையம் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி?
1: உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் அல்லது ஆப்பிள் iOS இல், நீங்கள் கூகுள் மேப்பை , ஆஃப்லைனை பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் கூகுள் மேப்ஸ் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
2: நீங்கள் செயலியை டவுன்லோடு செய்யும்போது, இன்காக்னிட்டோ மோடில் இருக்கக்கூடாது. இன்டர்நெட் கனக்ஷன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ALSO READ | வாட்ஸ்அப்பில் உங்கள் பெயரை மறைப்பது எப்படி?
3: உங்கள் திரையில் மேற்புற வலது மூலையில், தேடல் பேனலில் உங்கள் புரொபைல் புகைப்படம் இருக்கும். அதன் மீது டாப் செய்யுங்கள்.
4: உங்கள் திரையில் ஒரு ‘மெனு’ தோன்றும். அந்த மெனுவில் ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ (offline maps) இருக்கும். நீங்கள் ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ தேர்வின் கீழே உள்ள ‘select your own map’ (உங்கள் வரைபடத்தை தேர்வு செய்யுங்கள்) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
5: கிளிக் செய்தவுடன், ஒரு மேப் உங்கள் திரையில் தோன்றும். அந்த மேப்பை நீங்கள் பெரிதாக்கி, எந்த இடம் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும் என்று நீல நிற பெட்டிக்குள் தேர்வு செய்யுங்கள். நீங்கள் இந்த பெட்டியில் இடம் பற்றி தேட முடியாது, இடத்தை தேர்வு செய்ய மட்டுமே முடியும்.
ALSO READ | ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களின் பேட்டரி ஹெல்த் ஸ்டேட்டஸை எவ்வாறு செக் செய்வது?
6: நீங்கள் தேர்வு செய்தவுடன், திரையில் கீழே இருக்கும் நீல நிற பாக்ஸ் மீது டாப் செய்து அந்த இடம் பற்றிய மேப்பை டவுன்லோடு செய்யவும்.
7: அவ்வளவு தான். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்துக்கான கூகுள் மேப் இனி ஆஃப்லைனில் பயன்படுத்தலாம். இந்த தகவல், உங்கள் பதிவிறகப்பட்ட மேப்ஸ் பிரிவில், ஆஃப்லைன் மேப்ஸ் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் பயணிக்கும் போது, நீங்கள் செல்லவிருக்கும் இடத்துக்கான மேப்சை தேர்வு செய்து, உங்கள் வழிகாட்டியாக பயன்படுத்தலாம். எத்தனை மேப்ஸ்களை வேண்டுமானாலும் நீங்கள் டவுன்லோடு செய்யலாம் மற்றும் இணைய இணைப்பு இல்லாமல், டவுன்லோடு செய்த மேப்களை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.