Home /News /tamil-nadu /

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...

ரேஷன் பொருள் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

ரேஷன் பொருள் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

Ration shop: விற்பனையாளர்களின் சிறந்த பணியினை ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல் திறனையும் ஈடுபாட்டையும் மேம்படுத்தலாம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார்.

    சிறப்பாக பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்புகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ளார்.

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.

    இதையும் படிங்க - ரேஷன் பொருள் வழங்கல் துறையின் 12 முக்கிய அறிவிப்பு...

    பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் சிறந்த பணியினை ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல் திறனையும் ஈடுபாட்டையும் மேம்படுத்தலாம்.

    இதன் பொருட்டு சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும்.

    இதையும் படிங்க - ஹேப்பி நியூஸ்...! ரேஷன் கார்டு இனி வீட்டுக்கே வந்துவிடும்

    இதில் மாநில அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதோடு எடையாளர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 6,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    மாவட்ட அளவைப் பொறுத்தவரை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    இதேபோன்றே எடையாளர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

    மாநில அளவில் சான்றிதழ் மற்றும் இதர செலவிற்கு 15 ஆயிரம் ரூபாயும், ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் 3 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதன் மொத்த செலவினம் ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் அரசுக்கு ஏற்படும் என்று  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ration, Ration Shop, TN Assembly

    அடுத்த செய்தி