Home /News /tamil-nadu /

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் நல்ல முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் நல்ல முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

தரமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி

தரமபுரம் ஆதினம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி

Dharmapuram Aadheenam | தருமபுரம் ஆதீனம் பட்டிண பிரவேச நிகழ்சியில் அரசு துலாக்கோல் போல் நடுநிலையான நல்ல முடிவு எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    தருமபுரம் ஆதீனம் பட்டிண பிரவேசம்திற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக சட்டபேரவையில் நேரமில்லா நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சார்ய சாமிகள், பட்டிண பிரவேசம் நிகழ்ச்சி 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற பட்டிண பிரவேசம் நிகழ்சிக்கு வருவாய் துறை தடைவிதித்துள்ளது.

    ஆதீனத்தை பல்லக்கில் ஆமர வைத்து 72 பேருக்கு மேல் பல்லக்கில் சுமக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதிக்க வேண்டும். இதில் மரியாதை குறைவு ஒன்றும் இல்லை என்றார். எனவே இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 25 மற்றும் 26 ன் படி மதசுதந்திர விதியின் அடிப்படையில் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பா.ம.க , பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இதை தொடர்ந்து விளக்கமளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தருமபுர ஆதீனம் வரும் 22 ம் தேதி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி குறித்து எதிர் கட்சி தலைவர் அவையின் கவனத்தை ஈர்த்துள்ளார். 45 சைவ, வைணவ ,சக்தீபீட, ஆதீனங்கள் உள்ளன அனைவரையும் ஒருங்கிணைத்து உயர்மட்ட அலோசனை குழு அமைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். அறங்கவளர்களை நியமிக்கும் பொறுப்பில் கூட 4 ஆதீனங்கள் இடம்பெற்று உள்ளனர்.

    Also Read : பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

    அனைத்து சாதியினரும் அர்சகரகலாம் எனும் திட்டம் கூட ஆதீனங்கள் கையால் தான் ஆணைகள் அளிக்கப்பட்டது. பன்னெடுங்காலமாக வழங்கப்படாமல் இருந்த பணிநியமன ஆணைகளை கூட ஆதீனங்களை வைத்தே பணிநியமான ஆணைகளை முதல்வர் வழங்க வைத்தார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஆதீனங்களை அழைத்து ஆலோசனை பெற்றது உண்டா ? இன்று காலை ஆதீனத்துடன் 10 நிமிடம் தொலைபேசியில் பேசினேன்.

    அப்போது அவர் நாங்கள் தமிழ் சார்ந்தவர்கள் தமிழுக்கு உரிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது எனவும் ஒரு சிலர் தங்கள் செய்த தவறுகளை மறைக்க இதை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.நீதிமன்றதுக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்ல பட்டு உள்ளது நீதிமன்ற தீர்பை தொடர்ந்து நடுநிலையோடு துலாக்கோல் போல் இந்த அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Dharmapuram Aadheenam, DMK, Minister Sekar Babu, TN Assembly

    அடுத்த செய்தி