ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வரும் செய்தி தவறானது! கோமதி மாரிமுத்து விளக்கம்

இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். இந்த தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள்.

news18
Updated: May 21, 2019, 11:01 PM IST
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வரும் செய்தி தவறானது! கோமதி மாரிமுத்து விளக்கம்
கோமதி மாரிமுத்து.
news18
Updated: May 21, 2019, 11:01 PM IST
ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வரும் செய்தி தவறானது என்று கோமதி மாரிமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் வந்து தங்கப் பதக்கம் வென்றார். 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 விநாடிகள் நேரத்தில் வந்து முதலிடம் பிடித்திருந்தார். தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை, தமிழகத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில், ‘தோஹாவில் ஆசிய தடகளப் போட்டி நடந்த சமயத்தில் கோமதி மாரிமுத்துவிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் மாதிரியில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார் என்று நிருபனம் ஆகியுள்ளது. ஊக்க மருந்து தொடர்பாக மேற்கொள்ளபட்ட ‘ஏ’ சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ’பி’ சோதனையிலும் பாசிட்டிவ் என்று வரும் நிலையில் கோமதிக்கு 4 வருட காலம் தடை விதிக்கப்படும். அவர் வாங்கிய தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும். போலந்திலில் இந்திய தடகள வீராங்கனைகளுடன் கோமதி பயிற்சி பெறுவதாக இருந்தது. அது தடை செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆங்கில ஊடகங்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, ‘இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில்தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன். இந்த தகவலை அவர்கள் எங்குப் பெற்றார்கள்.

அதுபற்றி, என்னிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன். ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வியடைந்ததாக வெளியான செய்தி தவறு. பயிற்சிக்காக நான் போலந்து செல்வதிலும் எந்தச் சிக்கலும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...