வித்தியாசமான ஹேர்ஸ்டைல்... அயன் பட பாணியில் தலைமுடிக்குள் தங்க கடத்தல் - சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த கடத்தல்காரர்கள்

தங்கக்கடத்தல்

இதனையடுத்து அலெர்டான சுங்கத்துறை அதிகாரிகள் துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிரமான கண்காணித்துள்ளனர்.

 • Share this:
  அயன் படத்தில் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்து வைரங்களை கடத்திவருவார். விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க கடத்தல் வைரங்களை தலையில் விக் வைத்து மறைத்து வருவார். இதுபோன்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது. இப்படி கடத்திவரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

  துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மெசேஜ் வந்துள்ளது. இதனையடுத்து அலெர்டான சுங்கத்துறை அதிகாரிகள் துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிரமான கண்காணித்துள்ளனர்.

  சென்னையை சேர்ந்த சுபைர் உசேன், ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி ஆகியோரின் நடவடிக்கைகள் சந்தேகிக்கும்படியாக இருந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தனியாக விசாரித்துள்ளனர். இருவரின் ஹேர்ஸ்டைலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் தனியறையில் வைத்து சோதனை செய்துள்ளனர். தலையை முடியை பாதி ஷேவ் செய்துள்ளனர். தங்கத்தை கருப்பு நிறடேப்பில் சுற்றி அதனை தலைக்குள் மறைத்து வைத்து அதன்மேல் விக் வைத்து வந்துள்ளனர். இருவரிடமும் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதே விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த பாலு கணேசன் என்பவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

     துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சையத் அகமதுல்லா, சந்தோஷ் செல்வம், அப்துல்லா ஆகியோரும் அதே விக் பாணியில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 96 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 80 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 நபர்கள் இதே ‘விக்’பாணியில் ரூ.24,06,000 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தை மறைத்து கடத்திச்செல்ல முயன்று சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

  சென்னை விமானநிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு கரன்சி


  சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தல்காரர்கள் புது புது டெக்னிக்களை கையாண்டு கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அதனையும் கண்காணித்து சுங்கத்துறை அதிகாரிகள் திறம்பட கண்டுபிடித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: